பாலியல் தொந்தரவு

நாகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் குரவப்புலம் பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி சக்திவேல் மற்றும் கபிலன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐவரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட டெல்லி பெண்ணுக்கு கும்பகோணம் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.