மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆய்வு : செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி இ.ஆ.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் திரு மோகன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.