தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் வேளாண் துறையின் மூலம் விவசாயக்கி கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் டிராக்டர்கள் வழங்கினார். நடமாடும் காய்கறி அங்காடி வாகனத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு காய்கறிகளை வழங்கினார்.

மேலும் கடம்பூர் மற்றும் கயத்தாறு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி சண்முகநாதன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனபிரியா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் திரு.மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயா, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்), திரு.குற்றாலிங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அரசு அலுவலர்கள் உள்ளனர்.