திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் போட்டி : தூ.டி. மாதாநகர் முதல்பரிசு

தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம் எல் ஏ அறிவுறுத்தலின் பேரில் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. 15-03-2020 அன்று நடைபெற்ற இறுதிபோட்டியில் தூத்துக்குடி மாதாநகர் முதல்பரிசையும், இரண்டாம் பரிசு விளாத்திகுளம் அணியும் முன்றாம் பரிசு தூத்துக்குடி அணியும் வெற்றிபெற்றன. வெற்றி பெற்ற மாதாநகர் அணிக்கு ரூ15000ரொக்கமும் கோப்பையை வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ வழங்கினார். இரண்டாம் பரிசு விளாத்திகுளம் அணிக்கு ரூ10000 கோப்பையும் மூன்றாம் பரிசு விளாத்திகுளம் அணிக்கு ரூ 5000 கோப்பையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மதியழகன் பொதுக்குழு உறுப்பினர் என். பி ஜெகன் பெரியசாமி ,மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், மாவட்ட துணைசெயலாளர் ஆறுமுகம், இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதிப், மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், தொண்டர் அணி அமைப்பாளர் ராமர்,மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர நாராயணன், திமுக நிர்வாகிகள் முத்துதுரை, பிரபாகர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்