தருவைக்குளம் முதல் வெள்ளப்பட்டி வரை தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட முடிவு

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் முதல் வெள்ளப்பட்டி வரை செல்லும் கடற்கரை வழியான தார்சாலையில் உப்பாற்று ஓடையின் தரைப்பாலத்தை மேம்படுத்தி 5 மீட்டர் உயரமான மேம்பாலமாக கட்டித்தர ஊரக வளர்ச்சி துறையினர் மற்றும் மீன்வள ஆராய்ச்சி குழுமத்தினர் முடிவெடுத்து களப்பணி ஆய்வு செய்தனர்.

இவர்களுடன் ஊராட்சி மன்ற தலைவி, மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.