கொரோனா வார்டில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் குற்றச்சாட்டு : தூ.டி அரசு மருத்துவமனை

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களுக்கு போதிய சுகாதார வசதிகளை செய்து கொடுக்காத  மருத்துவமனை முதல்வர் மற்றும் இருப்பிட மருத்துவர் ஆகியோரின் மோசமான  நிர்வாகத்தினால் தங்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக செவிலியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் சுகாதாரமான கழிவறை இல்லாததினால் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாது செவிலியர்கள், மற்றும் மருத்துவர்களுக்கு ஓய்வு எடுக்க போதிய தங்குமிட வசதிகள்  ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை, இதனால் சமூக விலகளை கடைபிடிக்காமல் அனைவரும் வீடுகளுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டடுள்ளது. இந்த நிலையில் தங்களால் வீட்டில் உள்ளவர்களுக்கு கரோனா தாக்கும் அபாயம் உள்ளது.

கொரோனா வார்டில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு  உடைகள் (PPE Kit) வழங்கப்படாமல் இருப்பதோடு, அரசு சார்பில்  ஒதுக்கிய kit  எங்கே சென்றது என்பது மருத்துவமனை முதல்வருக்கே வெளிச்சம் என மருத்துவ ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத நிலையில்  சுகாதார பணியாளர்களையும், செவிலியர்களையும், மருத்துவர்களையும் நீண்ட நேரம் பணி செய்ய நிர்பந்திப்பதாக சம்பத்தப்பட்ட மருத்துவ பணியாளர்கள் புலம்பி வருகின்றனர். தூத்துக்குடி  மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பணி சுமை மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.