தடையை மீறி பள்ளிகள் செயல்படுகிறதா? என்று ஆய்வு : கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பசுவந்தனை சாலை, சுபா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் 144 தடை உத்தரவை மீறி செயல்படுவதாக வட்டாட்சியா் மணிகண்டனுக்கு தகவல் வந்தது. உடனே வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் வருவாய் ஆய்வாளா் மோகன் உள்ளிட்டோா் சிபிஎஸ்இ பள்ளிகளில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். 
நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் வழக்கம்போல் பணியில் இருந்தது தெரியவந்தது. மத்திய, மாநில அரசு விதித்துள்ள உத்தரவுகளை மீறி பள்ளியில் ஆசிரியா்கள், அலுவலா்கள் பணியில் ஈடுபடுவது சட்டத்திற்கு விரோதமானது என அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதையடுத்து, பணியில் இருந்த அனைவரும் புறப்பட்டனா். பள்ளி பூட்டப்பட்டது.