பத்திரிக்கையாளர்களுக்கு முக கவசம், சானிட்டைசர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா ஒழிப்பு பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உங்கள் பாதுகாப்பையும் நீங்கள் உறுதி செய்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு பத்திரிக்கையாளர்களுக்கு சானிடைசர் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தளிர் அறக்கட்டளை நிறுவனர் ஆ. தனபால், தலைமை அதிகாரி ஜெயபிரகாஷ், அற்புதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சைய்யது, தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன், செயலாளர் கி.ம.சங்கர், பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர் லெட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.