பரதநாட்டியத்தில் தேசியளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு -தூத்துக்குடி

தூத்துக்குடியைச் சோ்ந்த முத்துச்செல்வன் என்ற இளைஞரை பரதநாட்டியத்தில் தேசியளவில் முதலிடம் பெற்றதற்கு மாவட்ட ஆட்சியா் இன்று பாராட்டினாா்கள். அதனை தொடா்ந்து முத்துச்செல்வன் செய்தியாளா்களிடம் கூறும் போது விவேகானந்தா் பிறந்த நாளையொட்டி லக்னோவில் நடைபெற்ற 23 வது இளைஞா் தேசிய விழாவில் பங்கு பெற்று பரதநாட்டியத்தில் இந்திய தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். அதை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அவா்கள் நாட்டிய அணிகலன்கள் வாங்குவதற்காக 48 ஆயிரத்து 750 ரூபாய் கசோலை வழங்கியுள்ளாா்கள். அதற்கு இங்கே நான் அவருக்கு நன்றி தொிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது நோக்கம் பரதநாட்டியத்தில் மிகப்பொிய சாதனை படைக்க வேண்டும் மற்றும் பரதநாட்டிய ஆசிாியராக இருந்து பல கலைஞா்களை உருவாக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் முத்துச்செல்வன் கூறினார்.