வடமாநில தாெழிலாளர்களை அனுப்பும் ஏற்பாடுகள் பற்றி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் பீகார், மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மொத்தம் 8700 வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை முதல்கட்டமாக நெல்லையிலிருந்து பீகாருக்கு ரயில் இன்று இரவு 10 மணிக்கு செல்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து முதற்கட்டமாக 263 பேர் பீகார் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சாப்பாடு, டிக்கெட் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 4170 வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் குறித்த அனைத்து விபரங்களும் எடுக்கப்பட்டு அந்நந்த மாநில அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாளை ஜார்க்கண்ட் செல்லும் ரயிலில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 140 தொழிலாளர்கள் செல்லவுள்ளனர். பீகாருக்கு 263 பேர் செல்லவுள்ளனர் உத்திரபிரதேசத்திற்கு 240 தாெழிலாளர்களை அனுப்பவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.