உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தன்னலம் பாராமல் உழைத்து வரும் காவல்துறை காவல்துறை அமைப்பினர் நன்றியும் வாழ்த்தும் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு உதவிகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை பிரிவு சார்பில் தூத்துக்குடி மாநகர காவல்துறை மாநகராட்சி கூட்டுறவு மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான எட்வின் பாண்டியன் முக கவசங்களை வழங்கினார். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் வட்ட செயலாளர்கள் சசிகுமார், லூர்துசாமி, அமலன், சுடலைமுத்து, மனோகரன், சகாயராஜ், பிரைட்டன், ஆனந்த பாண்டியன், இனிகோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
