தூத்துக்குடி தனியார் காய்கறி மார்க்கெட்டில் நானும் குடும்பத்தினரும் எவ்வித பொறுப்பும் இல்லை: முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் அறிக்கை

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் சர்ச்சையின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியும், சூழ்ச்சியுமே! காரணம்! நான் மார்க்கெட் இயக்குனர் என நிரூபிக்க தயாரா? சவால் விட்ட முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் நான் இயக்குனர் ஆக உள்ளதாக பொய் தகவல்களை பரப்புகிறார்கள்.காய்கறி மார்க்கெட் சர்ச்சை பற்றி புள்ளி விபரமாக சி.த செல்லப்பாண்டியன் போலீஸ் செய்தி டிவி இணையதள தொலைக்காட்சிக்கு அளித்த பரபரப்பு பேட்டி மேலும் இந்த சர்ச்சை குறித்து முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான சி. த. செல்லப்பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது.


தூத்துக்குடி தனியார் காய்கனி மார்க்கெட்டில் நானும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் எவ்விதமான நிர்வாக பொறுப்பில் இல்லை என்றும் எனவே தன்னை தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி தனியார் காய்கனி மார்க்கெட் விவகாரத்தில் நான் அந்த மார்க்கெட்டில் இயக்குநராக இருப்பதாக தனியார் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களிலும் எனது புகைப்படத்தை வெளியிட்டு எனது நற்பெயருக்கும். புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


இந்த காய்கறி மார்க்கெட்டில் நானும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் எவ்விதமான நிர்வாக பொறுப்பில் இல்லாத நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கரோனா நோய்தொற்றின் காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் எனது சொந்த நிதியில் இருந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறேன்

ஆனால் தற்போது சில நாட்களாக பொது வாழ்க்கையில் நான் செய்யும் சமுதாய பணிகளை தொடர்ந்து செய்யக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியில் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் வெளிவரும் தவறான செய்திகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம்.தனியார் காய்கறி மார்க்கெட்டில் நானும், எனது குடும்பமும் எவ்வித நிர்வாக பொறுப்பிலும் இல்லாதபோது தொடர்ந்து தவறான செய்திகள் வெளிவந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Credits: Policeseithi