தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

தூத்துக்குடி கொரோனா ஊரடங்கு ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட பொருட்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில்

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை மற்றும் சித்தா மருத்துவதுறையின் கபசுர பொடி முககவசம், வாழைப்பழம், பிஸ்தா பருப்பு போன்ற பொருட்களுடன் அரிசி பை, உள்ளிட்ட தொகுப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மன்றத்திற்கு வருகை புரிந்து மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

இதில் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ராஜேஷ், இணைச்செயலாளர் ஜாய்சன், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், அன்பழகன், மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆத்திமுத்து, ராஜாசாலமோன், காதர், இசக்கி ராஜா மன்ற உறுப்பினர்கள் சரவணன், ரவி, கண்ணன், சாதிக்கான், ஜெயக்குமார், ராஜ்,பேச்சிமுத்து, முத்துமாரியப்பன், ஜெகதீஸ், மோகன்ராஜ், கோபால்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டவுன் டிஎஸ்பி கணேஷ் ,மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ,தென்பாகம் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.