தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் மாநகராட்சி ஆணையருக்கு பாராட்டு

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் மாநகராட்சி ஆணையருக்கு பாராட்டு தெரிவித்தனர். கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் அனைவருக்கும் மனிதநேயத்தோடு உதவி செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வி ப ஜெயசீலன் இ.ஆ.ப உத்தரவின்படி அதிகாரிகள் ஊழியர்கள் 60வார்டு பகுதிகளிலும் சுகாதாரத்தை பேணி பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் ஒலிபெருக்கி மூலம் விழப்புணர்வை ஏற்படுத்தி கழிவு பொருட்களை அப்புறப்படுத்தி தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமிநாசினி அடித்து வருகின்றனர். சாலை பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் தூவ படுகிறது. தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அமைந்துள்ள பின்பகுதியில் உள்ள காலியிடங்களில் கிடந்த தேவையற்ற கழிவு பொருட்கள் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி தரவேண்டும். என்ற கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து மாநகராட்சி சார்பில் அதிகாரி மேற்பார்வையில் நான்கு துப்புரவு பணியாளர்கள் முழுமையாக ஈடுபட்டு அப்பகுதியை சுத்தம் செய்து கொடுத்தனர். தினமும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மன்றத்திற்கு கிருமிநாசினி அடிக்கப்படுகிறது. மாநகராட்சி ஆணையருக்கு பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணைதலைவர் ராஜேஷ், துணைசெயலாளர் ஜாய்சன், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், அன்பழகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மன்ற உறுப்பினர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.