கேள்வி குறியாகும் பணியிட‌ மாற்றம் – தூத்துக்குடி

கொரோனாவிற்கு எதிராக தமிழகத்தில் தீவிரமாக நடவடிக்கைகள்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மூத்த சர்ஜிக்கல் மருத்துவர் சந்திரசேகரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி தமிழக அரசு சார்பாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரிக்கு இவரை துணை பேராசிரியராக மாற்றி தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவி வரும் இப்படிப்பட்ட சூழலில் இவரின் பணியிட மாற்றம் செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை முக கவசத்தை மாற்ற வேண்டும். ஆனால் மருத்துவர்களுக்கு போதிய முக கவசம் இல்லை. மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறோம். அதனால் எங்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள் என்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மூத்த சர்ஜிக்கல் மருத்துவர் சந்திரசேகர் கோரிக்கை வைத்து இருந்தார். சிலர் இதனால்தான் தற்போது இவர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகின்றனர்.

சுகாதாரத்துறையின் இந்த செயலை திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் கண்டித்து அவரது டீவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுருக்கிறார். டாக்டரின் பணியிட மாற்றத்திற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும், ஆனால் இப்படிபட்ட அவசர காலகட்டத்தில், அதுவும், 21 நாள் லாக் டவுன் இருக்கும் போது அவரை பணியிட மாற்றம் செய்வது தவறு, இப்படி நடவடிக்கை எடுப்பது அந்த மருத்துவரையும், அவரின் குடும்பத்தையும் மன ரீதியாக பாதிக்கும். எனவே உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும், என்று செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.