ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளை ஆய்வு அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதூர் துரைசாமிபுரம் பகுதியில் நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்குவதை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின் புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் அருகில் தங்கியுள்ள வெளி மாநிலத்தை சார்ந்த ஏழு குடும்பத்தினருக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் விலையில்லா அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி சத்யா கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரபலங்கள் உள்ளனர்.