கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பணிளைத் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வெளியே வர வேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது. தடை உத்தரவை மீறி தேவையின்றி வெளியே வாகனங்களில் சுற்றித் திரிவோரை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தகுந்த காரணங்கள் இல்லாமல் வெளியே சுற்றத்திரிந்ததாக நேற்று ஒரே நாளில் ஒரு லாரி உட்பட 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 54பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 9 நாட்களில் நேற்று இரவு நிலவரப்படி 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 452 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
