முக்கிய பகுதியான 4ம் கேட்டில் அத்தியாவசிய வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி : தூத்துக்குடி

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக வரும் 14-ஆம் தேதி வரை இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான நான்காம் கேட் செல்லும் சாலையில் பேரிகார்டு வைத்து போலீசார் முழுமையாக அடைத்துள்ளனர். அதனை அறியாமல் அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் சாலை முழுமையாக  அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் திரும்பி வேறு வழியே சுற்றி செல்கின்றனர். எனவே மாவட்ட எஸ்பி இந்த விஷயத்தில் உடனே நடவடிக்கை எடுத்து 4ம் கேட் பகுதியில் அத்தியாவசிய தேவையான காய்கறி, அரிசி செல்லும் வாகனங்கள்,ஆம்புலன்ஸ்கள், போலீஸ் வாகனங்கள்,  ஊடகத்தினர் வாகனங்கள் செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தர வேண்டுமென பாெதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.