கொரானா இருப்பதாக வதந்தி பரப்பியவர் கைது : தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே கெச்சிலாபுரத்தைச் சோ்ந்த பச்சைகிளி மகன் சிவா என்ற வேல்ராஜ் (25). என்பவர், குளத்தூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ஒரு நபரின் பெயரில் பதிவிட்டு அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவ விட்டுள்ளாா். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய
விசாரணையில், சமூக வலைதளத்தில் வெளியான தகவல் வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரசல்ராஜ் அளித்த புகாரின்பேரில், குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் செல்லத்துரை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். விசாரணையில் வதந்தி பரப்பியதாக சிவாவை, போலீசார் நேற்று கைது செய்தனா்.