ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்து வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தொற்றை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இந்த பொருட்களை குறைவாக வழங்குவது, பதுக்கி வைத்திருப்பது மற்றும் கடத்துதல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.

இதுபோன்ற சட்டவிரோதமான செயல்கள் நடப்பது குறித்து பொதுமக்கள் மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி 94981 04441, டிஎஸ்பி 94981 04527, தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் 94981 04851, சப்-இன்ஸ்பெக்டர் 94981 94533 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதே எண்களில் ‘வாட்ஸ்-அப்‘ தகவலாகவும் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.