ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 30 பேர் பஸ்சில் தூத்துக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் கடைகளில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் கடைகளில் பணியாற்றி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 30 பேர் பஸ்சில் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி பெற்றனர். அவர்கள் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் உரிய பரிசோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர்.