புதிய குடும்ப அட்டை வாங்கதவர்களும் நிவாரண பொருட்களை பெற்று கொள்ளலாம் : தூ.டி குடிமை பொருட்கள் வழங்கல் திட்டவட்டாச்சியர்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வருமானத்தில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு மூலம் இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த ஒரு வாரத்தில் தூத்துக்குடி குடிமை பொருட்கள் வழங்கல் திட்டவட்டாச்சியர் வதனாள், அண்ணாநகர் , பிரையண்ட்நகர், பெரியசாமி நகர், தாளமுத்துநகர் போன்ற பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்று அவர்களின் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து அவர்களில் 412 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கான ஒப்புதல் பெற்று கொடுத்துள்ளார். புதிய குடும்ப அட்டை பெற தாமதம் ஆனாலும் விண்ணபித்த தகுதியான நபர்கள் தாங்களுக்கு தங்கள் கைபேசியில் வந்த குறுஞ் சேதியினை வைத்தும் தங்களது ஆதார் அட்டையினை கொண்டு சென்றும் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது விநியோக திட்ட கடைகளுக்கு சென்று நிவார பொருட்களை பெற்று கொள்ளலாம் என குடிமைபொருள் வழங்கல் வட்டாச்சியர்  வதனாள் தெரிவித்துள்ளார்.