மூன்று நாட்களில் சம்பள பட்டியல் தயாரிக்க உத்தரவு : மாவட்ட ஆட்சியர்

தமிழக முதல்வர் உத்தரவுப்படி கொரானோ வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது.  
தூத்துக்குடி மாவட்டத்தில் மாத இறுதியில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பட்டியலை தயாரிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள்  மட்டும் இன்று (மார்ச் 30) முதல், ஏப்ரல் 1 என மூன்று நாட்களில் சம்பள பட்டியல் தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது.  இதற்கான
அனுமதியை பெற சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம்  அனுமதி கடிதம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், MUTHU MAVATTAM APP செயலி மூலமும், eoctut@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளவும். மேலும் இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கொரானோ வைரஸ் நோய் தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளி மற்றும் கை கழுவும் வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.