கரோனா பிடியில் இருந்து வேகமாக விடுபடும் தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 3,229 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டத்தில் மொத்தம் 27 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது அவர்களில் 25 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு மூதாட்டி இறந்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 12-ம் தேதிக்கு பிறகு கரோனா தொற்று எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 14 நாட்கள் தொடர்ச்சியாக புதிய தொற்று ஏற்படவில்லை என்றால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக தூத்துக்குடி மாவட்டம் மாறும். அதன்படி ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம் நகர்ந்துகொண்டு இருக்கிறது. இதனிடையே மே 3ம் தேதிக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை  விலக்கிக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது