குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்கள்  அங்கன்வாடி பணியாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம் ஆட்சியர் தகவல்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக எழும் புகார்களைப் பெறுவதற்கு ஒருங்கிணைப்பாளர்களாக தற்காலிகமாக செயல்படுவதற்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களின் அலைபேசி எண்களை தொடர்பு கொள்வதற்கு www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பகுதிக்குட்பட்ட அங்கன்வாடி மைய பணியாளர்களின் அலைபேசி எண்களை பெற்று, தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.

Credits : Tutyonline