புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்க்கவும் : கோவில்பட்டி கோட்டாட்சியர்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கோவில்பட்டி கோட்டாட்சியர்  அலுவலகத்தில், கோட்டாட்சியர் திருமதி.விஜயா தலைமையில் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளை முழுமையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு தரும் விதத்தில் புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்த்து தங்களது வீடுகளிலேயே தொழுகை, நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும். வீடுகளில் நோன்பு கஞ்சி தயார் செய்து, மற்றவர்களுக்கு வழங்க அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் டிஎஸ்பிக்கள் ஜெபராஜ் (கோவில்பட்டி), பீர் முகைதீன் (விளாத்திகுளம்), தாசில்தார்கள் மணிகண்டன், ராஜ்குமார், இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், முத்துலட்சுமி, பத்மாவதி, பள்ளிவாசல் நிர்வாகிகள் ஷேக் மைதீன், ஹிமாயூன், பட்டாணி மஸ்தான், அப்துல் வாசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.