கபசுர குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் மற்றும் வ உ சி பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதிகளுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய கபசுர குடிநீரினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு வழங்கினார். நகராட்சி மூலம் தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் தினம்தோறும் 2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் 70 சுகாதாரப் பணியாளர்களுக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தனது சொந்த பணத்தில் இருந்து 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளடங்கிய பைகளை வழங்கினார்.

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : உலக நாடுகளே கொரானா தொற்று நோய் குறித்து அஞ்சிக் கொண்டிருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் சுய ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீடித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரானா தொற்றுநோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் அவர்களும் சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் தெரிவித்து வருகிறார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரானா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி அவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தவகையில் நமது மாவட்டத்தில் 27 நபர்கள் கொரானா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஏற்கனவே 8 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 14 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நான்கு பேரும் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பயனின்றி ஒரு நபர் உயிரிழந்துள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மூலம் கோவில்பட்டி நகராட்சி பகுதிக்கு அம்மா உணவகத்திற்கு ரூ 6.17 லட்சமும், கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.31 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. மேலும் தூங்கி பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் சுய ஊரடங்கு காலத்தில் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானா நிவாரண தொகை ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிட்டார்கள். மேலும் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் வழங்கபடும் என தெரிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான 19 வகையான பொருட்கள் ரூபாய் 500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பொருட்களின் விலை சந்தையில் சுமார் ரூபாய் 600 ஆக உள்ளது. பொதுமக்களுக்கு சிரமமின்றி வீட்டின் அருகில் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் நியாயவிலை கடைகளில் இந்த பத்தொன்பது வகையான பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் நல வாரிய அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் சுமார் 86 லட்சம் நபர்களுக்கு ரூ.86.50 கோடி கொரானா நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது. மேலும் நரிகுறவர்கள் தேவையான காய்கறிகள் அரசிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 21.04.20 அன்றுவரை 1596 நபர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் 18 நபர்கள் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விடுவார்கள். 635 நபர்கள் குணமடைந்து வீடு திரும்புவார்கள். கொரானா நோய் தடுப்பு பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வுக்கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கொரானா தொற்றுநோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளிவரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தலைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.முருகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயா, வட்டாட்சியர் திரு.மணிகண்டன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் திரு.ராஜாராம், நிர்வாக பொறியாளர் திரு.கோவிந்தராஜன், கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. கமலவாசன், உறைவிட மருத்துவர் மரு. புவனேஸ்வரி, மரு.மோசஸ் பால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. மாணிக்கவாசகம், திருமதி.வசந்தா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் திரு.ராமச்சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.சுரேஷ் முக்கிய பிரமுகர்கள் திரு.அய்யாத்துரை பாண்டியன், திரு.விஜய பாண்டியன், திரு. சுப்புராஜ், மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.