தீப்பெட்டி தொழிற்சாலைகளை இயக்க ஏற்பாடு : அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ

கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை நாளை முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தெரிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. பெண்கள் அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்களின் நலன் கருதி கால அவகாசத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

ஊரடங்கால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகளை இயக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து, சுகாதாரமான முறையில் தொழிலாளர்களை பணியாற்றுவதற்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.