பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பல்வேறு நிறுவன உரிமையாளர்களுடன் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விட்டு அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் முதலமைச்சர் அவர்கள் 29.03.20 முதல் காலை 6 மணி முதல் 2.30 வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படி நமது மாவட்டத்திலும் கால வரம்பினை சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கடைபிடிக்கவேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தாலுகாவில் உள்ள வியாபாரிகள் தாலுகாவிலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது வாகனங்களுக்கு சார் ஆட்சியர் அலுவலகத்திலும் வாகனம் ஓட்டுவில்லைகளை பெற்றுக் கொண்டு தனது வாகனத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அரசு தெரிவித்துள்ளவாறு அனுமதி அளிக்கப்படுகிறது.

தங்களது கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தொழிலாளர்களுக்கு கை கழுவும் அவசியம் குறித்து எடுத்துக் கூற வேண்டும். அவர்களின் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். முகமூடி அணிந்து குறைந்த அளவில் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த படி Swiggy, zomoto உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ள நேரத்தில் அடையாள அட்டையுடன் உணவு டெலிவரி செய்ய வேண்டும். மொத்த வியாபாரிகள் தங்களது பணியாளர்களை ஒரே வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும். பணியாளர்களுக்கு நிறுவனங்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து நமது மாவட்டத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் 9 முதன்மை இந்திய ஆட்சிப்பணி உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து உள்ளார்கள். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அளிக்கப்படுவதோடு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு சில்லறை மொத்த வியாபாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் திரு.வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப , கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.பா.விஷ்ணுசந்திரன் இ.ஆ.ப , தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.மாரியப்பன் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பல்வேறு நிறுவன உரிமையாளர்கள்கலந்து கொண்டனர்.