தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 24 மணி நேரத்தில் 55,105 டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து துறைமுகபொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்கு தளம் -9ல் 10.04.2020 அன்று  எம்.வி. தியோடர் ஓல்டென்டோர்ப் (M.V. Theoder Oldendroff) என்ற கப்பலிலிருந்து 55,105 மெட்ரிக் டன் நிலக்கரியை 24மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இச்சாதனையானது, இதற்கு முந்தைய சாதனையான கப்பல் சரக்கு தளம் -9ல் 03.02.2020 அன்று  எம்.வி. அகியோ  சோஸ்டிஸ் என்ற கப்பலிலிருந்து 24மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 54,020 மெட்ரிக் டன் நிலக்கரியை விட அதிகமாகும்.
மால்டா நாட்டு கொடியுடன் எம்.வி. தியோடர் என்ற இக்கப்பல் 09.04.2020 அன்று இந்தோனேஷியா நாட்டிலிருந்து 73,507 டன் நிலக்கரியை  வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது. இக்கப்பலில் வந்த 73,507 டன் நிலக்கரியை மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் அதிவேகமாக கையாண்டன. இந்த 3 நகரும் பளுத்தூக்கிகளும் ஒரு நாளைக்கு 56,000 டன்கள் வரை சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. இந்த சாதனையின் கப்பல் முகவர் வோல்டுவைல்டு ஷிப்பிங் மற்றும் ஸ்டிவிடோர் ஏஜெண்ட் வில்லவராயர் அன் சன்ஸ்  ஆவர்.
தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான தொழிற்சாலைகளுக்கும் மற்றும் தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள அனல்மின்நிலையங்களுக்கும் தொடர்ந்து நிலக்கரி இறக்குமதி செய்வதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு பெரும்பாலும் நிலக்கரி வெளிநாடுகளிலிருந்தும் இந்திய துறைமுகங்களான தம்ரா, ஹால்தீயா மற்றும் பாரதீப் ஆகிய துறைமுகங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் 2019-20 நிதியாணடில் துறைமுகம் 13.26 மில்லியன் டன் நிலக்கரியை கையாண்டு தென்தமிழகத்தின் மொத்த சரக்குகளை கையாளுவதில் சிறந்து விளங்குகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் “கோவிட்-19 தொற்று உலகளவில்  பாதிப்பை ஏற்படுத்தி கொண்டுருக்கும் இத்தருணத்தில், வ.உ.சிதம்பரனார் துறைமுகம, அரசினால் அதற்கென பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பிரத்தியோக ஆணைகளையும் மற்றும் விதிமுறைகளையும் பின்பற்றி சரக்கு கையாளும் திறனையும் கண்காணித்து வருகிறது” என்று கூறினார். மேலும் அவர், “பிரத்தியோக நிலையான இயக்க முறையை பின்பற்றுதலின் மூலம் துறைமுக ஊழியர்கள் மற்றும் உபயோகிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது” என்று கூறினார்.