மகாராஷ்டிர அரசிடம் இருந்து கணவரை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு

வேலை விஷயமாக குஜராத் சென்ற கணவரை மீட்டு தன்னிடத்தில் ஒப்படைக்குமாறு அவரது மனைவி தூத்துக்குடி ஆட்சியருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
மனுவில் : தூத்துக்குடி மாவட்டம் வேதக் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஓட்டுநர் பணிபுரிந்து வருகிறார். அவரது பணி நிரந்தரமாக்கும் வேலையாக குஜராத் சென்றிருந்தார். அந்த சமயத்தில் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு போடப்பட்டது இதனால் எனது கணவர் மகாராஷ்டிரா மாநிலம் சர்தார் என்னுமிடத்தில் 14 நாட்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர அரசு அங்கு ஒரு விடுதியில் அவரை தங்க வைத்துள்ளனர். அங்கு அவர் உணவின்றி தவித்து வருகிறார் மேலும் எனது குழந்தைகள் அப்பாவை காணாததால் மிகவும் தவிர்த்து அழுது கொண்டே இருப்பதால் எனது கணவரை மீட்டு என்னிடத்தில் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.