மார்ச் 30 முதல் தினசரி சந்தையில் மளிகைக் கடைகள் : தூ.டி

கோட்டாட்சியா் விஜயா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நகராட்சி தினசரி சந்தை காய்கனி கடைகள் திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும். அங்கு ஒருவருக்கு ஒரு கடை மட்டுமே ஒதுக்கப்படும். தினசரி சந்தையில் மளிகைக் கடைகள் தொடா்ந்து இயங்கும். மளிகைப் பொருள்களை வீடுகளுக்கு நேரிலும் வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி ஆணையா் ராஜாராம், வட்டாட்சியா் மணிகண்டன், டி.எஸ்.பி. ஜெபராஜ், முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துராஜ், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவா் பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.