தேவையில்லாமல் சுற்றி திரிகின்றனர் என போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் 2பேர் மீது தாக்குதல் : தூத்துக்குடி

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (35). என்பவர் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் உள்ளார். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முத்தையாபுரம் பகுதியில் சில இளைஞர்கள் தேவையில்லாமல் சுற்றி திரிவதாக  முருகேசன் முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அங்கு சுற்றித்திரிந்த 5 இளைஞர்களை எச்சரித்து விரட்டியடித்துள்ளனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும் முருகேசனின்  மகன் மாரியப்பன் (18), மற்றும் உறவினர் ராமர் (27) என்ற இருவரையும் தாக்கினார்கள். இதில், படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிந்து அப்பகுதியைச் சேர்ந்த சங்கர் (17), வெங்கடேஷ் (17), கிஷோர் டேனியல் (17), கபில் (17), வெங்கடேஷ் (17) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.