தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் மாசுபட்டு உள்ளதால் குளத்தில் உள்ள மீன்கள் ஒவ்வொன்றாக இறந்து தண்ணீரில் மிதந்து அந்த பகுதியில் நெடிய வாடை வீசிக் கொண்டிருக்கின்றது. இதனால் வீட்டிற்குள் கூட இருக்க முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகின்றது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் நிலைமை உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சுகாதார கேடு வராமல் இருக்க தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.