தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி, திருச்செந்தூர் பேரூராட்சி, மற்றும் காணம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தூய்மைப் பணியாளர் களுக்கு பாதுகாப்பு உடை பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி சண்முகநாதன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனபிரியா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் திரு.மோகன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்), திரு.குற்றாலிங்கம் மற்றும் முக்கிய பிரமுகர் ஆறுமுக நாயனார் அரசு அலுவலர்கள் உள்ளனர்.