கரோனா வைரஸ் தடுப்பதற்காக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி சிந்தாமணி நகர், ராஜீவ் நகர் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பதற்காக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் இன்று(06.04.20) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் கலந்துகொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை துவக்கி வைத்து தாமே கிருமி நாசினிகளை தெளித்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். 


அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து 31 திருநங்கைகளுக்கு ரூபாய் 1000 வீதம் 31 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

நரிக்குறவர் காலனியில் பொதுமக்களுக்கு காய்கறி பயிர்களை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.


பின்னர் மத்திய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கரோனா வைரஸை  பரப்புகளை தடுப்பதற்காக உலகளாவிய மக்கள் நலனைக் காப்பதற்காக உலக நாடுகள் எல்லாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது நாட்டிலும் மக்கள் தொகை வழங்க உத்தரவினை 21 நாட்கள் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்திய அரசு அறிவித்து உள்ளது. சுய ஊரடங்கும் மூலம் எந்த வகையில் எந்த மக்களை பாதுகாக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையையும் மிக மகத்தான பணியான மருத்துவப் பணியாளர்களும் காவல்துறையினரும் துணை பணியாளர்களும் உள்ளாட்சி அமைப்பினர் ஊடகத்துறையினர் ஆகியோர்கள் அவர்களது பணியை நேர்த்தியோடு செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இன்று சமுதாயத்தில் பாதுகாக்கப்பட்டு இருக்கின்ற அனைத்து பிரிவினருக்கும் சுய ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2 கோடியே 15 இலட்சத்திற்கு மேற்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக 20 ஆயிரமும் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் எல்லாம் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.  அமைப்புசாரா தொழிலாளர்கள் பத்திரிகையாளர்கள் சமுதாயத்தில் குடும்ப அட்டை இல்லாமல் வாழ்கின்ற 4022 திருநங்கைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு விலை இல்லாமல் உணவுப் பொருட்கள் மற்றும் உதவித்தொகையும் வழங்குவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய பிரிவை சார்ந்த நரிகுறவர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இன்று செய்து கொடுத்திருக்கிறோம் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அவர்களுக்கும் அரசின் உதவிகள் கிடைக்கப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அவசர நிலை கருதி செல்ல வேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும்  காவல்துறையின் அனுமதி  பெற்ற பின்னரே செல்ல முடியும்‌.  நமது மாவட்டத்தில் இதற்காக முத்து மாவட்டம் என்ற செயலி துவங்கப்பட்டு உள்ளது. செயலியில் விண்ணப்பித்து அனுமதி பெற்றால் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளுக்கும் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அரசு ஆணைகள் ஆயில் மில் போன்ற தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்ற பணியாளர்கள் ஓட்டுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரானா ஒழிப்பிற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.