மது குடிக்க முடியாததால் தீ குளித்த கொத்தனார் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை மகன் கோபாலாகிருஷ்ணன் (40), கொத்தனார் பணி செய்து வருகிறார். இருந்துள்ளார். மேலும் மது பழக்கத்திற்கு அடிமையான அவர், ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது மதுக்கடைகள் மூடியிருப்பதால் மதுகுடிக்க முடியால் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திடீரென குடி பழக்கத்தை நிறுத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளாகி குடும்பத்தகராறு, தற்கொலை இதேபோல் முடிவெடுப்பர், என மனதத்துவ மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.