கொரானா கட்டுப்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் : அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர்கள் ஆகியோர்கான கூட்டம் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணு சந்திரன், மாநகராட்சி ஆணையர் திரு.ஜெயசீலன் தூத்துக்குடி ஆட்சியர் திரு சிம்ரோன் ஜீத் காலோன் மற்றும் அலுவலர்கள் உள்ளன.

பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஜூன் கிச்சன் பணியாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் திரு.மோகன் மற்றும் அலுவலக உள்ளன.