மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் மின்னணு வாகனம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மின்னணு வாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கொரானா விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அம்மா உணவகத்தில் அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.சத்யா அவர்கள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயா, நகராட்சி ஆணையர் திரு.ராஜாராம், முக்கிய பிரமுகர்கள் திரு.அய்யாத்துரை பாண்டியன், திரு.விஜய பாண்டியன் மற்றும் அலுவலகங்கள் உள்ளன.