தூத்துக்குடியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான தேர்வு !

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே தேசிய மாணவர் படை (என்.சி.சி) இயக்கம் செயல்படுகிறது. இதில் திருநெல்வேலி 9-வது தமிழ்நாடு சைகை அணியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவர்களுக்கான எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வு நடந்தது. இதில் மாணவ மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.