தூத்துக்குடி மாநகர மற்றும் புறநகர டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி தூத்துக்குடி மாநகர டிஎஸ்பி பிரகாஷ், திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய டிஎஸ்பியாக கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பாக திருநெல்வேலியில் டிஎஸ்பியாக பயிற்சி முடித்துள்ளார். 

தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக இருந்த பிரதாபன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருநெல்வேலி ரூரல் டிஎஸ்பியாக பணியாற்றிய பொன்னரசு தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
தூத்துக்குடி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  சாத்தான்குளம் டிஎஸ்பியாக பிரதாபன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  மணியாச்சி டிஎஸ்பியாக இருந்த ரவிசந்திரன் வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, பரமகுடியில் டிஎஸ்பியாக இருந்த சங்கர்  மணியாச்சியின் புதிய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.