அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழா: தூத்துக்குடி

புதுக்கோட்டையில் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது. முகாமில் 7 நாட்களும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள வாட்டர் டேங்க் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல், சாலை சீரமைப்பு செய்தல், மருத்துவமனைகளை சுற்றி சுத்தம் செய்தல் ஆகிய பணிகளைச் செய்தனர். பணிகளை கல்லூரி முதல்வர் முத்துராசு தலைமையில் நடைபெற்றது. மேலும் NSS நிறைவு விழா புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் பீட்டர், மற்றும் திமுக பிரதிநிதி ராஜா ஸ்டாலின், தொழிலதிபர் நோவா முன்னிலையில் நடந்தது. விழாவில் திட்ட அலுவலர் பொன்சிங் திட்ட அறிக்கைகளை வாசித்தார் மற்றும் பணிகளை செய்த மாணவர்களை பாராட்டினர். கல்லூரி முதல்வர் என்எஸ்எஸ் அலுவலர் பொன்சிங்கின் சேவையை பாராட்டி எதிர்காலத்தில் மாணவர்களும் ஒழுக்கத்துடனும் கீழ்ப்படிதல் உடனும் நடந்துகொண்டே தன்னுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று கூறினார். விழாவில் குமாரகிரி பொதுமக்கள் சார்பாக வேதசெல்வி, ஜெயாமெர்லின் ஆகியோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். ஏற்பாடுகளை என்எஸ்எஸ் அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.