தூ.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் விருதுநகருக்கு பணியிட மாற்றம்

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகமணி விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகம் கரோனா நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா வார்டு அமைக்க பயிற்சி மருத்துவர்களின் விடுதியை பயன்படுத்த கல்லூரி டீன் திருவாசகமணி முடிவு செய்திருந்ததாகவும், அதற்கு பயிற்சி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் விருதுநகர் அரசுக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு பதிலாக விருதுநகர் மருத்துவ கல்லூரி டீன் தூத்துக்குடிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கரோனா நெருக்கடியின் போது டீன் மாற்றப்படுவது இது 4ஆவது முறையாகும். ஏற்கெனவே சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, கோவை, திருச்சி ஆகிய மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.