தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம்.

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவன தலைவர் எண்ணூர்.நாராயணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில் அதிகமானோர் கலந்து கொள்வது என்றும், கட்சி துவங்கிய நாளை சிறப்பாக கொண்டாடுவது என்றும், மார்ச் 8 ம் தேதி கட்சியின் சார்பில் தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.