மொட்டை மாடியில் பட்டம் விடுவதை தவிர்க்கவும் : தூத்துக்குடி மின்வாரியம்

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை. இதனால் குழந்தைகள் பொழுது போக்கிற்காக மொட்டை மாடியில் பட்டம் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் பட்டம் நூல் அறுந்து மின்கம்பங்களில் விழுந்து மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி்மான கழகம் /  தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் / மேற்பார்வை பொறியாளர் ஜெ.அ.ஞானேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தற்பொழுது உள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி நகர்புற பகுதிகளில் பொது மக்கள் அவர்களின் வீட்டு மொட்டை மாடி / உயரமான கட்டிடத்தில் இருந்து பட்டம் விடும்போது அவற்றில் ஒரு சில பட்டம் அறுந்து,  பட்டத்திற்க்கான நூல் உயர் /  தாழ்வழுத்த  மின்பாதை மற்றும் மின்மாற்றி கட்டமைப்பில் விழுந்து மின்பாதையில்  ஷாட் சர்க்யூட் ஏற்படுவதால் மின்தடை ஏற்படுவதுடன் மின்விபத்துகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து மொட்டை மாடியில் பட்டங்களை விட வேண்டாம் என தூத்துக்குடி மின்வாரியம் அறிவித்துள்ளது.