தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணப்பணிகளில் உதவும் வகையில் தன்னார்வலர்கள் தேவை- மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டு வரும் அரசு சார் பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மக்கள் நலன் காக்கும் இந்த பணியில் சேரவிரும்பும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், மற்றும் நிறுவனங்கள் தங்களது விருப்பம் மற்றும் தொடர்பு விபரங்களை கீழ்கண்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இணையதள பதிவிற்கு http://www.thoothukudi.online என்ற இணைய முகவரி மூலமாகவும் மொபைல் பதிவிற்கு MUTHU MAVATTAM MOBILE APP என்ற மொபைல் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம்.