தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஊரடங்கு தேவையில்லை – ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து வந்த இந்திய கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது கப்பலில் வந்தவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் தனி பஸ்களில் அவர்களின் சொந்த மாவட்டத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர், அப்போது பேட்டியளித்த ஆட்சியர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஊரடங்கு தேவையில்லை என கூறினார்

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வெளியிலிருந்து வந்தவர்களாலும், ஏதாவது நிகழ்ச்சி மூலம்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நமது மாவட்டத்திற்கு இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை. முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். தொற்று உறுதி என கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதைக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஊரடங்கு தேவையில்லை. அதற்கான அவசியங்கள் மாவட்டத்தில் ஏற்படவில்லை’’