தமிழர் விடுதலை களம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ஆட்சியரிடம் மனு

தமிழர் விடுதலை களம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் வே. காளிராஜ் அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்துள்ளார், அந்த மனுவில் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டம், கீழக்கீரனூர் கிராமத்தினை வீடு, வாகனம், வாழை தென்னை ஆகியவற்றை சேதப்படுத்திய ஆதிக்க சாதியினர் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியும், மேற்படி கிராமத்தின் இளைஞர்களை விசாரணை பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதை தடுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.