வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு: நாட்டுப்புற கலைஞர்கள்

வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மேளங்கள் வாசித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு

திருவிழா காலங்களில் மட்டுமே கலைநிகழ்ச்சி வாய்ப்புகள் கிடைத்து அந்த வருவாயில் ஆண்டு முழுவதும் வாழ்க்கை நடத்தி வரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும்,
மற்ற தொழிலுக்கு தளர்வு அளித்ததை போல தங்களின் தொழிலுக்கும் கோயில் திருவிழாக்கள் மற்றும் சடங்கு, கல்யாணம், விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவைகளுக்கு குறைந்த அளவில் நாதஸ்வர வித்வான்கள் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டும் என அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.