ஜூலை 16 ஆம் தேதி வரை 3 பேரையும் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றொரு காவலர் முருகன் ஆகியோரை 15-நாட்கள் சிறைக்காவலில் வைக்க தூத்துக்குடி முதனை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா அவர்கள் உத்தரவை தொடர்ந்து சிறையில் அடைப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீது சாத்தான்குளம் காவலர்கள் நடத்திய தாக்குதல் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளாக கருத்தப்படும் சாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்ற காவலர் முருகன் ஆகிய மூன்றுபேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை விசாரணை செய்தனர் இதனை தொடர்ந்து இந்த மூன்று பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு பின்பு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னாள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணை முடிவடைந்து மூன்றுபேரையும் 15-நாட்கள் பேரூரணி சிறையில் அடைக்க தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா அவர்கள் உத்தரவு.

தொடர்ந்து அவர்கள் (16.7.2020) அன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்த உத்தரவு.